• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் விவசாய மேம்பாட்டுக்கு 1 கோடி வழங்கிய சூர்யா

July 24, 2018 தண்டோரா குழு

தீரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சத்யராஜ்,சூரி,சாயிஷா, பிரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.விவசாயத்தின் பெருமை மற்றும் கூட்டுகுடும்ப வாழ்க்கையை பற்றி பேசும் படம் என்பதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில்,இப்படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது.இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.அப்போது,நடிகர் சூர்யா விவசாய மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினார்.மேலும்,விழாவில் விவசாயத்தில் சாதனை படைத்த 5 பேருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.இதனால் சூர்யாவிற்கு பாராட்டு குவிந்து வருகிறது.

மேலும் படிக்க