• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கசிந்தது விஸ்வாசம் கதை, மாஸ் காட்ட போகும் தல – தெறிக்க விடும் ரசிகர்கள்.!

February 2, 2018 kalakkalcinema.com

தல அஜித் விவேகம் படத்திற்கு பிறகு மீண்டும் விஸ்வாசம் படத்தில் நடிக்க சிவாவுடன் கூட்டணி அமைத்துள்ளார், இந்த படத்தையும் விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. வரும் பிப்ரவரி 22-ம் தேதி முதல் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது, அதாவது படம் முழுக்க வடசென்னையை சார்ந்த கதையாக இருக்கும் எனவும் தல அஜித் வடசென்னை பாஷையில் பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தல அஜித் ஏற்கனவே வேதாளம் படத்தில் ஒரு பகுதியில் வடசென்னை பாஷை பேசி அசத்தி இருந்ததால் இந்த படத்தில் பட்டய கிளம்புவார் என ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

மேலும் படிக்க