• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா ?

April 19, 2018 தண்டோரா குழு

பாகுபலி என்னும் பிரம்மாண்ட படத்தை இயக்கி இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பிரபலமானவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி.இரண்டு பாகங்களும் சேர்த்து கிட்டத்தட்ட 400 கோடியில் தயாரிக்கப்பட்ட பாகுபலி படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இதனைத்தொடர்ந்து ராஜமெளலியின் அடுத்த படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு நிலவியது. சமீபத்தில் அவர் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார்.ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தில்,ஜூனியர் என்.டி.ஆர்.-ராம் சரண் தேஜா இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை, டி.வி.வி.தனய்யா தயாரிக்கிறார்.இந்தப் படம்,300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.ராம் சரண் தேஜா,போயபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார்.ஜூனியர் என்.டி.ஆர்., திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இந்த இரு படங்களின் ஷூட்டிங் முடிந்த பிறகு,இந்த வருடக் கடைசியில் எஸ்.எஸ்.ராஜமெளலி படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க