• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எழுத்தாளர் பாலகுமாரின் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

May 15, 2018 தண்டோரா குழு

பிரபல எழுத்தாளர் பாலகுமாரின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் கடும் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து, பாலகுமாரனின் உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலகுமாரன் எனது மிக நெருங்கிய நண்பர் அவரது இழப்பு பேரிழப்பு. பாட்ஷா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் இவரது வசனங்கள் தான். “எனது மற்ற படத்திற்கு வசனம் எழுதவைக்க முயற்சித்தேன், அவர் ஆன்மிகமும், இலக்கியமும் தான் முக்கியம் என தவிர்த்து விட்டார் எனக் கூறினார்.

தற்போது அவரது உடலுக்கு பல்வேறு திரைபிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க