• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என் ரூம் முழுவதும் விக்ரம் புகைப்படம் தான் இருக்கும் – கீர்த்தி சுரேஷ்

July 24, 2018 தண்டோரா குழு

சாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹரி சாமி ஸ்கொயர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரம்,கீர்த்தி சுரேஷ்,ஐஸ்வர்யா ராஜேஷ்,பாபி சிம்ஹா,பிரபு,சூரி,டெல்லி கணேஷ் எனப் பலரும் நடித்துள்ளனர்.விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ்,

“இயக்குநர் ஹரி படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பாக இயங்குவதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.அவரிடமிருந்து நேரம் குறித்த திட்டமிடல் பற்றி எளிதாக தெரிந்துக் கொள்ளலாம். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகையர் திலகம் பார்த்து இப்போது தான் என்னுடைய ரசிகையாகி இருக்கிறார்.ஆனால்,நான் அவர் நடித்த காக்காமுட்டை பார்த்ததிலிருந்தே நான் அவருடைய ரசிகை.
என்னுடைய சிறிய வயதில் அந்நியன் படத்தில் விக்ரம் சாரின் ரெமோ கெட்டப் புகைப்படங்களை அறை முழுவதும் ஒட்டி வைத்திருந்தேன்.இப்போ அந்த ரெமோவுடன் இணைந்து நடித்திருக்கிறேன். சாமி படத்தின் முதல் பாகத்தில் விக்ரம் எப்படியிருந்தாரோ அதே போல் இந்த படத்திலும் இருக்கிறார்” என்றார்.

மேலும் படிக்க