• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என்னை ஹீரோனு கூப்பிடாதீங்க எனக்கே கூச்சமாக இருக்கு – தினேஷ் மாஸ்டர்

May 16, 2018 தண்டோரா குழு

‘பாகன்’ படத்தை இயக்கிய அஸ்லம் தயாரிக்க, புதுமுக இயக்குநர் காளி ரங்கசாமி இயக்கும் படம் ‘ஒரு குப்பைக் கதை’. தமிழ் சினிமாவின் முக்கிய நடன இயக்குநராக வலம் வரும் மாஸ்டர் தினேஷ், இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகவுள்ளார்.

நடன இயக்குநர் தினேஷ் ஜோடியாக மனீஷா யாதவ் நடிக்க, முக்கியக் கேரக்டர்களில் யோகிபாபு, ஜார்ஜ் நடித்திருக்கிறார்கள்.இப்படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவத்தின் மூலம் வெளியிடவுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய தினேஷ் மாஸ்டர்,

நடனத்தை என்னால் விடவும் முடியாது இழக்கவும் முடியாது ஏனென்றால் அது எனக்கு குலதெய்வம் மாதிரி. என்னை ஹீரோ என்று அழைக்க வேண்டாம் எனக்கே கூச்சமாக இருக்கிறது. ஆரம்பத்தில் இயக்குநர் என்னிடம் நீங்கள் தான் ஹீரோ என்று சொல்லும் என் உயரத்திற்கு ஹீரோயின்களே கிடைக்க மாட்டங்க சும்மா இருங்கனு சொன்னேன். இந்த தருணத்தில் நான் விஜய்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும் ஏனெனில் ஆள் தோட்ட பூபதி பாடல் தான் என் வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்தது எனக் கூறினார்.

மேலும் படிக்க