• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என்னை மக்களுக்கு கொண்டு சேர்த்தது அம்மாவும் நீயே பாடலும் தான்: கமல்ஹாசன்

April 26, 2018 tamilsamayam.com

என்னை மக்களுக்கு கொண்டு சேர்த்தது அம்மாவும் நீயே என்ற பாடலும் தான் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“களத்தூர் கண்ணம்மா”படத்தில்,நடிகர் கமல் குழந்தை நட்சத்திரமாக வாயசைத்த “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே….” பாடலையும்,அதற்கு முன்பாக “பராசக்தி” படத்தில் “ஓ…ரசிக்கும் சீமானே… ” , “செங்கமலத்தீவு” படத்தில்,”பேசியது நான் அல்ல … ” ,”குமுதம்” படத்தில் “மியாவ் மியாவ் பூனை குட்டி… ” மற்றும்,”பாப்பா பாடும் பாட்டு….”,”நாயகன்” படத்தில் “நான் சிரித்தால் தீபாவளி…” உள்ளிட்ட மிகவும் பிரசித்தி பெற்ற,நூற்றுக்கணக்கான பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி (85).இவர் கடந்த சில மாதங்களாக கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் உடல் நலம் குன்றி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் இயற்கை எய்தினார்.

எம்.எஸ்.ராஜேஸ்வரியின் இறுதி சடங்கு இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை- 44,குரோம்பேட்டை சி-103 எம்.ஜி.ஆர்.தெரு,சோழாவரம் நகர் பகுதியில் உள்ள அவரது மூத்த மகளது இல்லத்தில் இருந்து புறப்பட்டு,குரோம்பேட்டை மயானத்தில் நடைபெறவுள்ளது.

எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு வெங்கடேசன் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.இவரது இளைய மகள் ஆர்த்தியும் இளம் பின்னணி பாடகியாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்து, இதே நாளில் அகால மரணம் அடைந்த துக்கமும் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க