• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் – த்ரிஷா

March 22, 2019 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும் இருந்து வருகிறார். விஜய் அஜித் கமல் விக்ரம் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

சமீபத்தில் விஜய் சேதுபதியோடு இவர் நடிப்பில் உருவான 96 திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படம் பல விருதுகளையும் குவித்து வருகிறது. தெலுங்கிலும் இப்படம் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் த்ரிஷாவின் இயல்பான நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில், த்ரிஷாவுடைய திருமணம் குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கள் ஏற்படுவது வழக்கம் தான். இந்நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் தனது திருமணம் குறித்து த்ரிஷா பேசியுள்ளார். அதில், ‘இப்போதைக்கு நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆனால், எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க