• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்த வாரம் ரிலீஸ் ஆகும் சிறு பட்ஜெட் படங்கள்

May 23, 2018

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக்கிற்கு பிறகு வாரத்திற்கு மூன்று நான்கு படங்கள் ரிலீஸாகி வருகிறது.இதில் பெரிய பட்ஜெட் சிறிய பட்ஜெட் என அனைத்து படங்களும் வெளியாகிவருகிறது.
இதனால் தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களும் சிறு பட்ஜெட் படங்களும் ஒன்றாக ரிலீஸ் செய்வதால் சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

இதற்கு தீர்வாக திரைப்பட சங்க நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். தற்போது சிறு பட்ஜெட் படங்களை மட்டும் வெளியிடலாம் என திரைப்பட சங்கங்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி வரும் மே 25ம் தேதி சிறுபட்ஜெட் படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் வரும் வெள்ளியன்று “ஒரு குப்பைக் கதை” ,“செம”, “காலக்கூத்து”, “திருப்பதிசாமி குடும்பத்தார்”, “கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க” ஆகிய ஐந்து சிறுபட்ஜெட் படங்களும் ரிலிஸாக உள்ளது.

அதர்வா நடிப்பில் உருவான “செம போத ஆகாத” திரைப்படம் மே 25 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இப்படம் ஜூன் மாதம் 14ம் தேதிக்கு தள்ளி வைக்கபட்டுள்ளது. மேலும் பரத் நடித்துள்ள பொட்டு திரைபடத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது தள்ளிபோனது.

மேலும் படிக்க