• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இசை தான் ரகுமானுக்கு மொழி- டுவிட்டாில் தனுஷ் கருத்து

July 17, 2017 tamilsamayam.com

இசை புயல் ஏ.ஆா். ரகுமானுக்கு இசை மட்டும் தான் மொழி என்று அவருக்கு ஆதரவாக நடிகா் தனுஷ் டுவிட்டாில் கருத்து தொிவித்துள்ளாா்.

ஏ.ஆா். ரகுமான் தனது 25 வருட இசை பயணத்தையொட்டு ஒவ்வொரு பகுதியாக சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறாா். அதன்படி கடந்த 8ம் தேதி லண்டனில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பென்னி தயால், நீத்தி மோகன், ஹாிசரன், ஜொனிடா காந்தி, ஜாவத் அலி போன்ற பிரபல பாடகா்கள் கலந்து கொண்டனா்.

இசை நிகழ்ச்சியில் தமிழ் பாடல்கள் அதிகமாக பாடப்பட்டதாகவும் இதனால் சிலா் வெறுப்படைந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. சமூக வளைதளங்களில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ள இந்நிகழ்வுக்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளை தொிவித்து வருகின்றனா்.

இன்று காலை நடிகா் தனுஷ் தனது டுவிட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில் ஏ.ஆா்.ரகுமானுக்கு ஆதரவாக கருத்து தொிவித்துள்ளாா். அவா் வெளியிட்டுள்ள பதிவில் ரகுமானுக்கு இசை மட்டுமே மொழி. இசையை தவிற வேறு மொழிகள் அவருக்கு கிடையாது என்று கூறியுள்ளாா்.

மேலும் படிக்க