இறுதிச்சுற்று படத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர் பாக்ஸராக இருந்து நடிகையாக மாறிய ரித்திகா சிங். இந்த படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இதையடுத்து ஆண்டவன் கட்டளை ,சிவலிங்கா போன்ற படங்களில் நடித்திருந்தார்.
தற்போது இவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் பாலாவிடம் பணிபுரிந்த விவேக் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங் நடிக்கவுள்ளார். இந்த படத்தை எக்ஸட்ரா எண்டர்டெயிண்மெண்ட் தயாரிக்கிறது. இது அருண் விஜய் நடிக்கும் 27 வது படம் பாக்ஸர் ஆகும். பாக்ஸர் படத்தில் பத்திரிகையாளராக ரித்திகா சிங் நடிக்கவுள்ளார். ரித்திகா ரிப்போர்ட்டர் ஆக இருந்து பாக்ஸராக மாற முயற்சிப்பார் என்ற தகவலும் நம்பத்தக்க வட்டாரங்களிடமிருந்து கிடைத்துள்ளது.
ஏற்கனவே ஆண்டவன் கட்டளை படத்தில் பத்திரிக்கையாளராக ரித்திகா சிங் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது