• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிகாரபூர்வமாக வெளியான சூர்யா-36 படத்தின் அறிவிப்பு!

January 2, 2018 tamilsamayam.com

சூர்யாவின் 36வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படமான ‘சூர்யா 36 திரைப்படம் விரைவில் ஆரம்பமாகும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கவுள்ளார். கடந்த ஆண்டு அருவி, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் செல்வராகவன் இயக்குகிறார்.

புத்தாண்டு முதல் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துவங்கப்பட்டதாகவும், வரும் பொங்கல் முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க