 June 13, 2017
June 13, 2017  tamilsamayam.com
tamilsamayam.com
                                நடிகை அமலா பால் அடுத்த திருமணத்திற்கு தயாராவதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
சிந்து சமவெளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அமலா பாலின் முகம் மைனா படம் மூலம் ரசிகர்களிடம் பரிட்சயம் ஆனது. மைனா பெரும் வெற்றி அடைந்ததை அடுத்து தெய்வ திருமகள், வேட்டை, வேலையில்லா பட்டதாரி, தலைவா ஆகிய படங்களில் நடித்தார். இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடன் அமலா பாலுக்கு காதல் மலர்ந்தது.
இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நடிகை அமலா பால் அவரை விவாகரத்து செய்வதாக திடீரென அறிவித்தார். அதனை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். விஐபி 2, திருட்டு பயலே 2, பாஸ்கர் எனும் ராஸ்கல் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திருமணம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இனி உங்கள் வாழ்க்கையில் காதல், கல்யாணம் ஆகியவற்றிற்கு இடம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், என்ன இப்படி கேக்குறீங்க, கண்டிப்பா இருக்கும் என்று பதில் அளித்துள்ளார். இதன் மூலம் விரைவில் அமலா பால் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.