• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜித்துக்கு ஜோடியாகும் காலா பட நாயகி!

July 4, 2018 தண்டோரா குழு

நடிகர் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தில் நடிகை ஈஸ்வரி ராவ் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.

வீரம்,வேதாளம்,விவேகம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சிவா – நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம்.சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.இப்படத்தில் விவேக்,யோகி பாபு,தம்பி ராமைய்யா,ரோபோ ஷங்கர் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில், அதாவது தந்தை,மகனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.மேலும் படத்தின் கதாநாயகியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் தந்தையாக நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அண்மையில் வெளியான காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க