• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் டிவி புகழ் ராமருக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை

September 7, 2019 தண்டோரா குழு

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் ராமர். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற வசனமும் ஆத்தாடி என்ன உடம்பு என்ற பழைய பாடலை இவரது மாடுலேஷனில் பாடியதும் இவரை புகழ் உச்சிக்கு கொண்டு சென்றது.

சமீபகாலமாக சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த ராமர், இப்போது ஹீரோவாகவும் ஆகிவிட்டார். அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி நடிக்கிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. நேற்று பூஜையுடன் படத்தின் பணிகள் துவங்கியது. சூப்பர் டாக்கீஸ், அவதார் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. குறும்பட இயக்குனர் மணி ராம் இப்படத்தை இயக்குகிறார். ஜபீஸ் கே.கணேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், விஷ்ணு விஜய் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

மேலும் படிக்க