April 14, 2017
தண்டோரா குழு
கபாலி படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் ரஜினி நடித்து வருகிறார். படமும் இறுதிக்கட்ட பணியில் இருப்பதால் விரைவில் படத்தின் ஃபஸ்ட் லுக் வரும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்தையும் கபாலி புகழ் பா.ரஞ்சித் இயக்கபோவதாக அறிவிக்கபட்டிருந்தது. இப்படத்தை நடிகர் தனுஷின் வண்டர்பார் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
எனினும், இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதற்கிடையில், தனுஷ் நேற்று ASK DD என்ற டாக்கில் டுவிட்டரில் தன்னுடைய ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அதில் ஒரு ரசிகர் ரஜினி, ரஞ்சித்தின் படம் எப்போது தொடங்குகிறது என்று கேட்டார், இதற்கு பதிலளித்த தனுஷ் மே மாத நடுவில் தொடங்குகிறது என்று கூறியுள்ளார்.