February 24, 2020
தண்டோரா குழு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்தின் 168-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை விஸ்வாசம் பட இயக்குநர் சிவா இயக்குகிறார்.
இப்படத்திற்கு டி.இமான் இசையக்கவுள்ளார். இதன் மூலம் ரஜினி படத்துக்கு முதன்முறையாக டி.இமான் இசையமைக்கவுள்ளார். ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும், நடிகைகள் நயன்தாரா, மீனா , குஷ்பூ, நடிகர் பிரகாஷ்ராஜ் காமெடி நடிகர் சூரி,சதீஷ் என நட்சத்திர பட்டாளமே இப்பபடத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்திற்கு அண்ணாத்தே என பெயரிடப்பட்டுள்ள தாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.