• Download mobile app
07 Mar 2026, SaturdayEdition - 3678
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் பாலிவுட் பக்கம் திரும்பிய தனுஷ் !

January 30, 2020 தண்டோரா குழு

தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ராஞ்சனா திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். அதன் பின் அமிதாப் பச்சனுடன் இணைந்து ஷமிதாப் திரைப்படத்தில் நடித்தார். அதன் பின் தமிழில் கவனம் செலுத்தி வந்த தனுஷ் தற்போது மீண்டும் பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளார்.தனுஷ் ஹிந்தியில் தனது 3-வது படத்தை கம்ஃபார்ம் செய்துள்ளார்.

இப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்குகிறார். ‘அட்ராங்கி ரே’ (Atrangi Re) எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சாரா அலி கான் நடிக்கிறார். மேலும், ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் ஸ்டார் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். இப்படத்துக்கு ஏ. ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மேலும், தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளார். இப்படம், 2021-ஆம் ஆண்டின் காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது

மேலும் படிக்க