• Download mobile app
09 May 2025, FridayEdition - 3376
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு !

January 21, 2019 தண்டோரா குழு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அட்லீ இயக்கதில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.

இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் பரியேரும் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கதிர், காமெடி நடிகர் யோகி பாபு, விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி இப்படம் உருவாவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது. இதில்,நடிகர் விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக் குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க