• Download mobile app
05 Mar 2026, ThursdayEdition - 3676
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக் பாஸ் 2 வீட்டில் ஒருவர் பலி போலீசார் விசாரணை

September 8, 2018 தண்டோரா குழு

பிரபல தொலைகாட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 2 தற்போது 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் 16 பேர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மிஞ்சியுள்ளனர். நடிகைகள் மும்தாஜ், விஜயலட்சுமி, ஐஸ்வர்யா, ஜனனி ஐயர், ரித்விகா, யாஷிகா, சென்றாயன், தாடி பாலாஜி உட்பட 8 பேர் மட்டுமே மிஞ்சியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு, பூவிருந்தவல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் தனி அரங்கில் வீடு போன்று செட் அமைத்து நடந்து வருகிறது.இதற்காகஅங்கு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் இரவும் பகலுமாக அங்கு தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்டம், மத்தூரைச் சேர்ந்த குணசேகரன்(30) என்பவர் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். நிகழ்ச்சி நடக்கும் அரங்கின் 2-வது மாடியில் குணசேகரன் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு குணசேகரன், தான் தங்கியுள்ள அரங்கின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.உடனே அருகில் இருந்தவர்கள் குணசேகரனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மருத்துவமனையிலிருந்த குணசேகரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ் விசாரணையில் குணசேகரன் சாப்பிட்டு விட்டு கைகழுவும் போது தவறி கீழே விழுந்ததாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க