January 3, 2019 தண்டோரா குழு
‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கும் அடுத்த படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’.
இப்படத்தை இயக்குனர் ரஞ்சித்தின் சிஷ்யர் அதியன் ஆதிரை இயக்குகிறார். இப்படத்தில் ‘அட்டக்கத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு தென்மா இசை அமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இன்று சென்னையில் துவங்கியது. இந்த படப்பிடிப்பை இயக்குனர்கள் பா.ரஞ்சித், ‘பரியேறும் பெருமாள்’
படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தார்கள். இன்று துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து பல நாட்கள் நடைபெறவிருக்கிறது.