• Download mobile app
14 Dec 2025, SundayEdition - 3595
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘பாகுபலி 2’ இமாலய வெற்றி: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிரபாஸ்

May 4, 2017 tamilsamayam.com

எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான ‘பாகுபலி 2’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், நடிகர் பிரபாஸ் ரசிகர்களின் பேராதரவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

உலக சினிமாவில் இந்திய சினிமாவுக்கும் கவுரம் தேடித் தந்துள்ள ‘பாகுபலி 2’ திரைப்படத்தின் கதாநாயகன் பிரபாஸ், தனது 5 ஆண்டுகால கடுமையான உழைப்பின் வெற்றியை தற்போது அமெரிக்காவில் கொண்டாடி வருகிறார். நெருங்கிய நண்பர்களுடன் அமெரிக்காவில் விடுமுறை கொண்டாடி வரும் பிரபாஸ், குடும்பத்தார், நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரபாஸ் தனது அறிக்கையில், இந்த 5 ஆண்டுகாலம் எனக்கு உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருந்து அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி. உங்களுடைய ஆதரவில்லாமல் இது சாத்தியம் ஆகியிருக்க முடியாது. அனைவருக்கும் அன்பு கலந்த எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

‘பாகுபலி 2’ திரைப்படத்தில் நேர்த்தியான, கம்பீரமான நடிப்பினை வெளிப்படுத்திய பிரபாஸ்க்கு ரசிங்கர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். ‘பாகுபலி 2’ வெளியான முதல் நாளிலேயே ரூ.121 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. இப்படம் விரைவில் ரூ.1000கோடி வரை வசூல் சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க