• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பரவை முனியம்மா குணமடைந்து வருகிறார் விரைவில் வீடு திரும்ப உள்ளார் – மருத்துவமனை விளக்கம்

November 1, 2019 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் தூள் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா. தூள் படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்தும் பாடியும் உள்ள பரவை முனியம்மா சின்னத்திரையிலும் சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார்.

வயது முதிர்வு காரணமாக எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் மதுரை பரவை பகுதியில் உள்ள தனது மகன் வீட்டில் வசித்து வருகிறார். சமீப காலமாக கிட்னியில் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் இவர் இன்று சிகிச்சை பலனின்றி மதுரையில் உயிர் இழந்து விட்டதாக சமூக வளையதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ஆனால் இது உண்மையில்லை, நான் நேற்று தான் பரவை முனியம்மாவை பார்க்க சென்றிருந்தேன். அவர் நலமுடன் உள்ளார். தேவையில்லாமல் வதந்திகளை பரப்பாதீர்கள் என கேட்டு கொண்டுள்ளார் இளம் நடிகர் அபி சரவணன்.

மேலும், பரவை முனியம்மா விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார்.முனியம்மாவுக்கான சிகிச்சை செலவுகளை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம் என்று மதுரை வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க