• Download mobile app
07 May 2026, ThursdayEdition - 3739
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெற்றிக்கண் ரீமேக் சர்ச்சை..! முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்..!

February 27, 2020 தண்டோரா குழு

1981-ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் நெற்றிக்கண்.இந்த படத்தின் கதையை இயக்குனர் விசு எழுதியிருந்தார். இதற்கிடையில், நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்து தனுஷ் நடிப்பதாக தகவல் பரவியது.

இதனையடுத்து, நெற்றிக்கண் படத்துக்கு கதை எழுதிய என்னிடம் உரிமை பெறாமல் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடர்வேன் என்று எச்சரித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.இந்நிலையில், “நடிகர் தனுஷ் விசுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நெற்றிக்கண் படத்தை தான் ரீமேக் செய்ய இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்ட செய்தி உண்மை இல்லை. நிருபர் ஒருவர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் ஏதாவது ஒரு படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று நினைத்தால் எந்த படம் என்று கேட்டார். அதற்கு தான் அதற்கு நெற்றிக்கண் என்று பதில் அளித்தேன். அந்த படத்தின் உரிமையை நான் யாரிடமும் வாங்கவில்லை. யாரிடமும் பேசவும் இல்லை. அதன் முதல் கட்ட பணிகளை தொடங்கியதாக வெளியான தகவல் தவறானது என்று தெரிவித்தார்.

இதன் மூலம் நெற்றிக்கண் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க