• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் தனுஷ் உடன் நடிக்க ஆசை!-பேச்சுலர் பட நடிகை திவ்ய பாரதி பேச்சு…!

April 24, 2022 தண்டோரா குழு

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சி தொடர்பு மற்றும் ஆடை வடிவமைப்பு ஃபேஷன் துறை சார்பில் ஃஎப் சேரிஸ் ஃபெஸ்டிவல் நடைபெற்றது.

இதில் குறும்படப் போட்டி, ஃபேஷன் ஷோ போட்டோகிராபி டிரீம், கேட்சர் மேக்கிங், மெஹந்தி, ட்ராயிங் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.கல்லூரி மானவர்களால் அரங்கேறிய ஆடை அலங்கார அணிவகுப்பில் லண்டன்,பாரிஸ் போன்ற நகரங்களில் நடப்பது போன்ற அரங்க அமைப்புடன் பல்வேறு நவ நாகரீக உடைகளுடன் மாணவ மாணவியர் அணிவகுப்பு நடத்தியது காண்போர் கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பேச்சுலர் பட நடிகை திவ்ய பாரதி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கல்லூரி மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கபட்ட இந்த துறையில் முயற்சிகளை முன்னெடுத்து பல்வேறு சாதனைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர் தனக்கு நடிகர் தனுஷ் உடன் நடிக்க மிகவும் ஆசை உள்ளதாகவும் அதுமட்டுமல்லாமல் முக்கிய பிரபல நடிகர்களுடன் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க