• Download mobile app
18 Sep 2024, WednesdayEdition - 3143
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துவங்கியது அருண் விஜயின் மாஃபியா படப்பிடிப்பு !

July 6, 2019 தண்டோரா குழு

துருவங்கள் 16′ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். முதல் படத்திலேயே இவருக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது.

இதனையடுத்து அரவிந்தசாமி நடித்த ‘நரகாசுரன்’ படத்தை இயக்கினார். இப்படத்தின் படப்படிப்பு நிறைவடைந்து விரைவில் திரைக்கு வரவுள்ளது.இதையடுத்து, , கார்த்திக் நரேன் அடுத்ததாக அருண் நடிக்கும் மாஃபியா படத்தை இயக்கவுள்ளார்.இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும் இப்படத்தில் நடிகர் பிரசன்னா, நடிகை பிரியா பவானிசங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை லைகா நிறுவனம் சில நாட்களுக்கு முன் வெளியிட்டது.இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. அருண் விஜய் கார்த்திக் நரேனுடன் செல்பி எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க