• Download mobile app
06 Mar 2026, FridayEdition - 3677
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தவறான புகைப்படத்தால் கடுப்பான துல்கர் சல்மான்

May 8, 2017 தண்டோரா குழு

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மலையாளத்தில் முன்னணி நடிகராக வளம் வரும் இவர் தமிழில் வாய் மூடி பேசவும் படத்தின் மூலம் அறிமுகமானார். .

கடந்த 2015ம் ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த ஓகே காதல் கண்மணி படத்தின் மூலம் இவருக்கு தமிழில் நிறைய ரசிகர்கள் உருவாகினர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இந்த செய்தி சிறுது நேரத்தில் தீயாய் பரவி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

இதற்கிடையில், துல்கர் சல்மானின் குழந்தை இது தான் என்று கூறி சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்கள் பரவின. இதனால் கடுப்பான துல்கர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தயவு செய்து தவறான புகைப்படத்தை வெளியிட வேண்டாம். என்னால் முடியும்போது உங்களுக்கு பகிர்கிறேன் என்று கடுப்பாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க