• Download mobile app
06 May 2026, WednesdayEdition - 3738
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘தளபதி 64’ படத்தில் இணைந்த இயக்குனர்

October 4, 2019 தண்டோரா குழு

‘மாநகரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன் பின் கார்த்தியின் கைதி படத்தை இயக்கியுள்ளார்.

இவர் தற்போது விஜய்யை வைத்து ‘தளபதி 64’ திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் ஆடை பட இயக்குனர் ரத்ன குமார் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ”என்னால் நம்ப முடியவில்லை. விஜய் அண்ணாவுடனும் என் நண்பன் லோகேஷ் கனராஜுடனும் இணைந்து பணியாற்ற உள்ளேன். படக்குழுவுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க