• Download mobile app
25 Jan 2026, SundayEdition - 3637
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தளபதி படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணையும் பிரபலம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

February 11, 2019 தண்டோரா குழு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து, சூப்பர்ஸ்டார் ரஜினி அடுத்தாக ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இத்திரைப்படத்திற்கான மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கான தேர்வு விரைவில் துவங்க உள்ளது. இப்படத்தின் முதல்கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை உறுதிபடுத்தும் விதமாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ”தளபதி படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைவதில் பெருமகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் சிவன் ஏற்கனவே ஏ.ஆர். முருகதாஸுடன் துப்பாகி, ஸ்பைடர் ஆகிய படங்களில் பணியாற்றி இருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தில் பணியாற்றிய சந்தோஷ் சிவன் தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க