• Download mobile app
10 May 2026, SundayEdition - 3742
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தல அஜீத்தின் 59 வது படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்!

December 14, 2018 தண்டோரா குழு

தல அஜீத் சிறுத்தை சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவான படம் விசுவாசம். இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது.

இப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களின் இயக்குநர் ஹெச்.வினோத் நடிக்க உள்ளார். இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இப்படம் பாலிவுட்டில் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் தான் என கூறப்படுகிறது.சமீபத்தில் அஜீத், வினோத், போனிகபூர் கலந்து கொண்ட கதை விவாதம் சென்னையிலுள்ள போனிகபூர் இல்லத்தில் நடந்தது.ஆனால் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் ‘தல 59’ படத்தின் பூஜை இன்று நடந்தது. பின்னர் போனிகபூர் புரொடக்ஷன் சார்பில் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், அஜீத் பெயரிடப்படாத அடுத்த படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார் என்றும், இந்த படத்தின் நடிகர்கள், டெக்னீசியன்கள் விபரம் விரைவில் வெளியாகும் என்றும், இது பிங்க் ரீமேக்தான் என்றும் பதிவிடப்பட்டிருந்தது.

‘பிங்க்’ படத்தில் அமிதாப்பச்சன், டாப்ஸி பண்ணு நடித்திருந்தனர். இந்த படத்தில் அமிதாப்பச்சனின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. தமிழில் அவரது கதாபாத்திரத்தில் ‘தல’ நடித்தால் நன்றாக இருக்குமென்றும் ஒரு சாரார் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க