• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் பார்த்திபன் ராஜினாமா கடிதம்

February 1, 2019 தண்டோரா குழு

தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் பார்த்திபன் ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் 75 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் கவுரவிக்கும் விதமாகவும் ’இளையராஜா-75’ விழாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடக்கி வைக்கவுள்ளார். மேலும் முன்னணி நடிகர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யபட்டது. தொடர்ந்து எதிர்ப்பு வந்த போது விஷால் தரப்பினர் நிகழ்ச்சியை திட்டமிட்டப்படி நடத்த வேலைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் பார்த்திபன் ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். இவர் அண்மையில் நடத்த செயற்குழு கூட்டத்தில் கவுதம் மேனனுக்கு பதிலாக தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இளையராஜா-75 நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ள நிலையில் தயாரிப்பாளர் சங்க பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க