• Download mobile app
07 May 2026, ThursdayEdition - 3739
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனுஷின் ‘D43’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

July 28, 2021 தண்டோரா குக்கு

கோலிவுட், ஹாலிவுட் என பிஸியாக வலம் வரும் நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில்,தனுஷிற்கு ஜோடியாக
மாளவிகா மோகனன் நடிக்கிறார்.
மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள்.ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில்,இன்று (ஜூலை 28) தனுஷ் தனது பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்திற்கு ‘மாறன்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதனை தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள். முழுக்க த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகிறது. தற்போது ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க