• Download mobile app
07 Mar 2026, SaturdayEdition - 3678
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனுஷின் ஹாலிவுட் படம் தமிழில் வெளியாகும் தேதி அறிவிப்பு

May 21, 2019 தண்டோரா குழு

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் ‘மாரி 2’ திரைப்படம் வெளியாகியது. தற்போது தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார்.

இவர் ‘தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’ என்ற பிரெஞ்சு – ஆங்கில திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் பல்வேறு நாடுகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படம் தமிழில் ‘பக்கிரி’ என்ற தலைப்பில் வருகின்ற ஜூன் 21ம் தேதி வெளியாகவுள்ளதாக ஒய்நாட் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், அதே தினத்தில் பல்வேறு நாடுகளிலும் இப்படம் வெளியாகும் என்றும் ஒய்நாட் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமித் திரிவேதி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு மதன் கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க