• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனுஷின் மாரி 2 படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

December 4, 2018 தண்டோரா குழு

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரி 2 படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும் வரலட்சுமி, வித்யா, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் தனுஷுக்கு வில்லனாக டோவினோ தாமஸ் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ‘அராத்து ஆனந்தி’ என்ற ஆட்டோ ஓட்டும் பெண்ணாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படம் வரும் டிசம்பர்21ம் தேதி வெளியாகும் என தனுஷ் அறிவித்துள்ளார். மேலும், நாளை இப்படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, படப்பிடிப்பு முடித்து ட்பபிங் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படம் வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியிட கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க