• Download mobile app
14 Mar 2026, SaturdayEdition - 3685
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியீடு!

July 24, 2017 tamilsamayam.com

சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், செந்தில், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் தானா சேர்ந்த கூட்டம்.

கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்நிலையில், சூர்யா நேற்று தன்னுடைய 42வது பிறந்தநாளை கொண்டாடினார்.இதனை முன்னிட்டு தானா சேர்ந்த கூட்டத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இந்த போஸ்டர் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெற்றது. இந்த போஸ்டரை வைத்து ஓவியா ரசிகர்கள் இப்படத்தின் டைட்டில் ஓவியாற்விற்கு பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் 2வது போஸ்டரும் வெளியாகியது. இந்தப் போஸ்டரின் ஒரு பக்கத்தில், சூர்யா லுங்கியுடன் இருப்பது போன்றும், மற்றொரு பக்கத்தில் சிட்டியில் மக்கள் கூட்டத்துடன் இருப்பது போன்றும் போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க