• Download mobile app
07 May 2026, ThursdayEdition - 3739
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் டைட்டில் இது தான் !

February 2, 2019 தண்டோரா குழு

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான ‘சீம ராஜா’ படத்தை தொடர்ந்து சிவர்கார்த்திகேயன் தன் சொந்த தயாரிப்பு படமான கனா படத்தில் நடித்து இருந்தார்.

இதற்கிடையில், சிவகார்த்திகேயன் ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ்பிக்ஷன் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.ஆனால், ராஜேஷ் இயக்கத்தில் பெயர் சூட்டப்படாத படத்தில் நடித்து வந்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் காமெடி நடிகர் சதீஷ் நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் படத்திற்கு ‘மிஸ்டர் லோக்கல்’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க