• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிம்புவுக்கு ஜோடியான சிவகார்த்திகேயன் பட நாயகி !

March 29, 2019 தண்டோரா குழு

சென்னை – 28 இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கி வரும் படம் ‘பார்ட்டி’. இப்படத்தில், சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், ‘மிர்ச்சி’ சிவா, ‘கயல்’ சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ், ஷாம்
என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு சிம்பு வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். ‘V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு மாநாடு என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

சிம்பு ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. படத்தை தொடர்ந்து மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார்.இந்நிலையில் இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க