• Download mobile app
18 Sep 2024, WednesdayEdition - 3143
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அய்யப்பனும் கோஷியும்’ பட இயக்குநர் சச்சி கவலைக்கிடம்

June 16, 2020 தண்டோரா குழு

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான படம் வெளியான ‘அய்யப்பனும் கோஷியும்’. ப்ரித்விராஜ், பிஜு மேனன் இணைந்து நடித்திருந்த இப்படத்தை சச்சி இயக்கியிருந்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது. இதற்கிடையில்,சில தினங்களுக்கு முன்பு சச்சி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ஜூபிளி மிஷன் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

“16 ஜூன் 2020 அன்று, சச்சிதானந்தனுக்கு, மொத்த இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த சில மணி நேரங்களுக்குப் பின் மாரடைப்பு ஏற்பட்டது. பின்பு அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வேறு மருத்துவமனையிலிருந்து ஜூபிளி மிஷன் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். வென்டிலேட்டர் மற்றும் மற்ற மருத்துவ உதவிகள் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு பிரிவைச் சேர்ந்த மருத்துவர்களும் அவரது சிகிச்சையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க