• Download mobile app
19 Aug 2026, WednesdayEdition - 3843
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜித்தின் 2 படங்களை இயக்கும் வினோத் – ரிலீஸ் தேதியும் அறிவிப்பு !

December 15, 2018 தண்டோரா குழு

தல அஜீத் சிறுத்தை சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவான படம் விசுவாசம். இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது.

இப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களின் இயக்குநர் ஹெச்.வினோத் நடிக்க உள்ளார். இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இப்படம் இந்தியில் வெளியாகி ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காகும். அஜீத்தின் 59வது படமான இந்தப் படத்தில் அமிதாப்பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடிக்கிறார். நேற்று இந்தப் படம் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அஜித்தின் 60 வது படத்தையும் வினோத் இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பிங்க் ரீமேக் படம் அஜித்தின் பிறந்த நாளான மே 1, 2019-ல் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.

அதைபோல், அஜீத்தின் 60வது படம் 2019-ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் தொடங்கப்படும் என்றும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி, தினா, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட அஜித் படங்களுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தில் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

தொடர்ந்து நான்கு படங்கள் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வந்த அஜித் தற்போது வேறு ஒரு இயக்குனருடன் இணைத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க