• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

களைக்கட்டிய பைக் ஆல்ட்ரேசன் தொழில்

June 27, 2016 வெங்கி சதீஷ்

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருசக்கர வாகனம் என்றாலே குடும்பஸ்தர்கள் மூன்று முதல் நான்குபேர் செல்லும் வாகனமாகவே இருந்தது. இதனால் அந்த இருசக்கர வாகனங்களை ஓட்டுவதைக் கல்லூரி மாணவர்கள் வெறுத்து வந்தனர். இதையடுத்து அவர்கள் தங்களுக்கு வாங்கித் தரப்பட்ட வாகனங்களைத் தனது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றம் செய்து கல்லூரிகளுக்கு ஓட்டுவந்தனர்.

இதன் மூலம் தன்னை ஒரு தனித்தன்மை வாய்ந்தவன் எனக் கட்டிக்கொண்டதோடு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தனர். குறிப்பாகப் பெண்களின் கவனத்தை ஈர்த்து வந்தனர். அதற்காகவே அப்போது பலர் இந்த ஆல்ட்ரேசன் வொர்க் எனப்படும் வாகன பாகங்களை மாற்றியமைக்கும் வேலையைச் செய்து வந்தனர். குறிப்பாக இந்த மோகம் 1990களில் இருந்தே கோவை மாவட்டத்தை ஆட்டிப்படைத்து வந்தது.

அதுமட்டுமின்றி வாகன போட்டிகளிலும் கோவை மாவட்டம் சிறந்து விளங்கியது. எனவே கோவையில் மட்டும் சுமார் 10க்கும் மேற்பட்டோர் பைக் ஆல்ட்ரேசன் பணிகளைச் செய்து வந்தனர். அவர்களில் ஒருவர் தான் டிங்கர் பாபு. மகளிர் பாலிடெக்னிக் அருகே தனது பணிமனையை வைத்துள்ள இவர் பல்வேறு மாடல்களில் இருசக்கர வாகனங்களை வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

குறிப்பாக இவரது கைவண்ணத்தில் உருவான பல வாகனங்கள் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நாயகனைச் சுமந்து சென்று சாதனை படைத்துள்ளது. இது குறித்து அவர் நம்மிடம் விளக்கியது தான் கீழே உள்ள பேட்டி.

மேலும் படிக்க