• Download mobile app
18 Nov 2025, TuesdayEdition - 3569
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சம்பளத்தின் ஒரு பகுதியை திருப்பி அளித்து விடுகிறேன் – மாநிலங்கவை உறுப்பினர் பாண்டா

December 19, 2016 தண்டோரா குழு

நாடாளுமன்றம் நடக்காமல் முடங்கும் நாட்களில் சம்பளத்தின் ஒரு பகுதியை திருப்பி அளித்து விடுகிறேன் என ஒடிசா மாநில மாநிலங்கவை உறுப்பினர் பையந்த் ஜே. பாண்டா கூறியுள்ளார்.

நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 5௦௦ மற்றும் 1,௦௦௦ ரூபாய் செல்லாது என்று அறிவிப்பை வெளியிட்டார். அதன்பிறகு, மக்கள் பண தட்டுபாடால் பல இன்னல்களை சந்திக்க நேர்ந்தது. முதலில் 5௦ நாட்கள் இந்த இன்னலை பொறுத்துக்கொள்ளும் படி மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன் பிறகும், மக்கள் அதிகாலை முதல் வங்கிகளிளும்,ஏ.டி.எம் இயந்திரம் முன்பும் காத்துக்கிடக்கின்றனர்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டு வருவதால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடங்கியது. இதனால் மத்திய அரசுக்கு பல கோடி ருபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதனால்,பிஜு ஜனத்தாதல் கட்சியை சேர்ந்த
ஒடிசா மாநில மாநிலங்கவை உறுப்பினர் பையந்த் ஜே. பாண்டா, முடங்கிய நாட்களில் தனது சம்பள பணத்தை திருப்பி தருவதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடங்கிய நாட்களுக்கான சம்பளத்தின் ஒரு பகுதியை அரசுக்கு திரும்பி அளித்து விடுகிறேன். இதே போல் நான் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாக செய்து வருகிறேன்.

இவ்வாறு முடங்கும் போது நம் நாடு நிறைய பணத்தை இழக்கிறது. எம்.பி களாக இருந்துக்கொண்டு பல சலுகைகளை பெறுகிறோம். ஆனால், நாம் செய்ய வேண்டிய பணிகளை சரியாக செய்வதில்லை. என்னுடைய 16 ஆண்டுகள் எம்.பி வாழ்கையில் ஒரு நாள் கூட நாடாளுமன்ற அமளியில் கலந்து கொண்டதில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க