• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

18 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைகிறதா விஜய்-யுவன் கூட்டணி?

December 24, 2021 தண்டோரா குழு

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துவருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார்.செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு டப்பிங் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

இதற்கிடையில், விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தைப் பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கு தமன் இசையமைக்க இருப்பதாக கூறப்பட்டது.இந்நிலையில் நடிகர் விஜய்யை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.மேலும் ‘தளபதி 66’ படத்தில் தமனுக்கு பதிலாக யுவன் சங்கர் ராஜா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க