• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி !

December 14, 2021 தண்டோரா குழு

நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நடிகர் அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

தமிழில் பல ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்.இயக்குநர் ஷங்கரின் முதல் படமான ‘ஜென்டில்மேன்’ படத்தில் ஹீரோவாக நடித்த அர்ஜுன் அதன் பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் படத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் அர்ஜுன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வந்த ‘சர்வைவர்’ நிகழ்ச்சியின் மூலம் டிவி தொகுப்பாளராகவும் அறிமுகமானார்

இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

“எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தேவையான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என்னோடு தொடர்பில் இருந்த அனைவரும் தங்களைப் பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் நன்றாக இருக்கிறேன். அனைவரும் தயவுசெய்து பாதுகாப்பாக இருக்கவும். முகக்கவசம் அணிய மறந்து விட வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க