• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை இனி பயன்படுத்த முடியாது

December 15, 2016 தண்டோரா குழு

அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மருந்துகள் வாங்க பயன்பாட்டில் இருந்த பழைய 5௦௦, 1000 ருபாய் நோட்டுகள் வியாழக்கிழமை(டிசம்பர் 15) நள்ளிரவு முதல் பயன்படுத்த முடியாது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 8ம் தேதி 5௦௦ மற்றும் 1,௦௦௦ நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதற்கு பிறகு மக்கள் பல நாட்களாக வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் வரிசையில் நின்று பணம் எடுக்க வேண்டிய அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் பல மக்கள் இறந்தும் உள்ளனர்.

இருப்பிலும், சமையல் எரிவாயு, தண்ணீர், மின்சாரம், மருந்து பொருள்கள், பெட்ரோல் டீசல் ஆகியவற்றை பெறுவதற்கு பழைய 5௦௦ மற்றும் 1,௦௦௦ ரூபாய் நோட்டுகளை குறிப்பிட்ட காலம் வரை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கான கால அவகாசமும் நீடிக்கப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு முதல் இந்த பழைய 5௦௦ மற்றும் 1,௦௦௦ ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த முடியாது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சக்திகாந்த தாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதாவது:

குறிப்பிட்ட சேவைகளுக்காக, பழைய 5௦௦ மற்றும் 1,௦௦௦ ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு வியாழக்கிழமை நள்ளிரவு முதல் முடிவுக்கு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க