• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழந்தைகள் காப்பகத்திற்கு உணவு உடை வழங்கிய ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர்

December 14, 2016 தண்டோரா குழு

கோவை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர் கோவையிலுள்ள அனாதைகள் காப்பகங்களில் உள்ள குழந்தைகளுக்கு உணவு உடை வழங்கினர்.

கோவை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் ஆசாத் நகர் வட்டமும், சமூகசேவை பிரிவும் இணைந்து கோவை போத்தனூரில் உள்ள Family for children குழந்தைகள் காப்பகம் மற்றும் கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள மெர்ஸி ஹோம் ஆகிய காப்பகங்களுக்கு சென்று உணவு மற்றும் உடைகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் வட்ட ஊழியர்கள் குடும்பத்தோடும் பெண்கள் பிரிவினரும் கலந்து கொண்டனர். உணவு மற்றும் உணவுகளை வழங்கிய பின்பு காப்பகங்களில் பராமாரிக்கப்பட்டு வரும் அனாதைகளும், மனவளர்ச்சிக் குன்றியவர்களும், சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்களோடு கலந்துரையாடல்களை மேற் கொண்டனர். மேலும், அங்குள்ள ஊழியர்களிடத்திலும் வாழ்த்து சொல்லி அவர்களின் தியாகத்தை பாராட்டி வந்தனர்.

இது குறித்து JIHன் சமூகசேவை பிரிவு செயலாளர் அப்துல் ஹக்கீம் கூறுகையில்,

சமூகத்தில் தேவையுடையோரை அடையாளம் கண்டு நம்மால் இயன்ற பொருளாதரா பங்களிப்புகளை செய்ய வேண்டும் எனவும் தேவையுடைய நபர்களுக்கு குறைந்தபட்சம் நம்மாலான ஆறுதல்களையும், வழி காட்டுதல்களையும் வழங்கலாம் எனவும் கூறினார். மேலும். வாய்ப்பிற்கேற்ப நம்மில் பலரும் இது போன்ற மறுவாழ்வு மையங்களுக்கு சென்று வர முயற்சி செய்வதுடன் , நம்மாலான பொருளாதார உதவிகளையும் செய்ய முயற்சிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

மேலும் படிக்க