• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூபாய் நோட்டு அறிவிப்பால் இன்னும் எத்தனை பேர் உயிரிழக்க நேரிடும்?

December 13, 2016 தண்டோரா குழு

பழைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் இன்னும் எத்தனை பேர் உயிரிழப்பாளர்கள் என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி திங்களன்று(டிசம்பர் 12) கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி நவம்பர் 8ம் தேதி பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தப் பிறகு, வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க மக்கள் தினமும் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறு நிற்கும் போது பலரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டெரிக் ஓ பிரையன் தனது டுவிட்டர் பக்கத்தில்,
5௦௦ மற்றும் 1,௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, மக்கள் தினமும் வங்கி மற்றும் ஏடிஎம் வாசலின் நிற்கவேண்டிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அவ்வாறு காத்திருப்பதாலும், பணத்தை மாற்ற முடியாத வருத்தத்தாலும் இது வரை 95 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அதைபோல் மாநிலங்கள் வாரியாக உயிரிழந்தவர் பட்டியலையும் அவர் வெளியிட்டிருந்தார்.

இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் மறுமொழி செய்தியை மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, இந்த அறிவிப்பால் இன்னும் எத்தனை பேர் உயிரிழப்பாளர்கள் என்று பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க