• Download mobile app
14 Apr 2026, TuesdayEdition - 3716
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

படப்பிடிப்பில் ஆர்ஜே பாலாஜி ஜீவி. பிரகாஷ் காயம்.

March 29, 2016 முகமது ஆஷிக்

இயக்குநர் ராஜேஷ் இயக்கும்’கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் நடித்து வருகிறார் ஜி வி பிரகாஷ். இப்படத்தில் இரண்டு நாயகிகளாக அவீகா கோர் மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்து வருகிறார்கள். பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, பிரமானந்தம், ஆர் ஜே பாலாஜி. ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜி வி பிரகாஷ் மற்றும் ஆர் ஜே பாலாஜி இருவரும் காரில் செல்ல வில்லன்கள் துரத்துவது போன்ற காட்சியைப் படமாக்கி வந்தார்கள்.

அப்போது கண்டெய்னர் லாரி மோதியதில் ஜி வி பிரகாஷ் சென்ற கார் நிலை தடுமாறி சாலைகளுக்கு இடையே இருக்கும் தடுப்புச் சுவர் மீது மோதியது. இதில் ஆர் ஜே பாலாஜிக்கு மூக்கிலும், ஜி வி பிரகாஷிற்கு முகம் மற்றும் தோட்பட்டையிலும் அடிப்பட்டிருக்கிறது. விபத்தைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ஜி வி பிரகாஷ் மற்றும் ஆர் ஜே பாலாஜி இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் பெரியளவிற்கு பாதிப்பு இல்லை என்றவுடன் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பி இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க