• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கிராம சபை கூட்டம் நடத்தியதற்க்காக போடப்பட்ட வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்

September 22, 2021 தண்டோரா குழு

கோவையில் கிராம சபை கூட்டம் நடத்தியதற்க்காக போடப்பட்ட வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என திமுக வழக்கறிஞர் கணேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் திமுக சார்பில் தற்போது உள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று கிராம சபை கூட்டம் நடத்தி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.அதே போல கோவையில் கிராம சபை கூட்டம் நடத்தி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இதற்கு அப்போதைய அதிமுக கட்சியினர் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்தனர். தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய திமுக நிர்வாகிகள் மீது அப்போதைய அதிமுக அரசு வழக்கு பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்கு கோவை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இதில் வழக்கு பதிவு செய்யப்பட்ட திமுக நிர்வாகிகள் ஆஜராகினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக வழக்கறிஞர் கணேஷ்குமார்,

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் மக்களுக்காக போராட்டப்பட்ட வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் எனவும்,தொடர்ந்து மக்களுக்காகா தமிழக முதலமைச்சர் வழியில் செயல்படுவோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க