• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செல்லாத நோட்டு அறிவிப்பால், சிரமப்படாத கிராமங்கள்

December 3, 2016 தண்டோரா குழு

ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததை அடுத்து நாடு முழுவதும் மக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாயினர். ஆனால், குஜராத்தில் அகோதரா கிராமும், மகாராஷ்டிரத்தில் தாசாய் கிராமமும் எந்த பாதிப்புக்கும் ஆளாகாமல் உள்ளன.

அங்கு யாரும் தங்களது ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கு நீண்ட கியூ வரிசையில் நிற்கவில்லை. தற்போது வெளியிடப்பட்டுள்ள ரூ. 2000 , ரூ. 500 நோட்டுகளை பெறவும் இல்லை. காரணம், இரு கிராமங்களுமே டிஜிட்டல் மயமாகிவிட்டதுதான்.

அகோதரா கிராமம் 2015 ம் ஆண்டே இந்தியாவின் முதல் டிஜிட்டல் கிராமமாக மாறி விட்டது. அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் தங்களில் அன்றாட தேவைகளுக்கும் மொபைல் போன் மூலமே பணம் செலுத்தி வருகின்றனர்.

அகோரா கிராமத்தை தொடர்ந்து, மகாராஷ்டிரத்தில் உள்ள தாசாய் கிராமமும் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறிவிட்டது.
இந்த கிராமங்களில் யாரும் பணத்தைக் கையில் வைத்துக் கொள்வதில்லை. அலைபேசி மற்றும் கார்டு தேய்க்கும் இயந்திரம் மூலமே பணபரிவர்த்தனையை செய்து வருகின்றனர்.

உணவகங்கள், மருந்துக்கடைகள், உரக் கடைகள், மளிகைக் கடைகள் எல்லாவற்றிலும் கிரெடிட் கார்டுகள் மூலம் மக்கள் பணம் செலுத்துகிறார்கள்.ஏன், முடித்திருத்தக நிலையங்களுக்குச் சென்றாலும் இப்படித்தான் கட்டணம் செலுத்துகிறார்கள்.

இரு கிராம விவசாயிகள், மக்கள், வியாபாரிகள் என அனைவரும் பிரதமரின் கறுப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தாசாய் கிராமத்தில் ஏற்கனவே 40 சதவீதம் கடைகளில் கார்டு தேய்க்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் கிராமம் மொத்தமும் பணமில்லா பரிவர்த்தனைக்கு முழுவதுமாக மாறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கிராமத்தில் இரண்டு வங்கிகளின் கிளைகள்தான் உள்ளன. இருந்தாலும், அங்கே பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்ள யாரும் செல்லவில்லை. புதிய ரூ. 2000 நோட்டுக்களை வாங்கவும் யாரும் வரவில்லை என வங்கி ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவு இரு கிராமங்களிலும் நிறைவேறிவிட்டது.

மேலும் படிக்க