• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை டவுன்ஹால் மைக்கேல் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பாக கொரோனா நிவாரணம்

July 10, 2021 தண்டோரா குழு

கொரோனா கால நேரத்தில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மேடை கலைஞர்களுக்கு கோவை டவுன்ஹால் மைக்கேல் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பாக கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த விதிக்கப்பட்ட முழு ஊரடங்கால் அனைத்து சேவைகளும் முடங்கின.பல்வேறு துறை சார்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் ,விழாக்கள் மேடை நிகழ்ச்சிகள் இல்லாததால் மேடை கலைஞர்களும் போதிய வருமானமில்லாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு காலகட்டங்களில் பயின்ற முன்னாள் மாணவர்கள் இணைந்து மேடை கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினர். கொரோனா கால விதிமுறைகளுக்கு உட்பட்டு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இதில், பள்ளியின் முதல்வர் பங்குதந்தை ஆண்ட்ரூ கலந்து கொண்டு மேடை கலைஞர்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை மைக்கேல்ஸ் பள்ளியின் முன்னால் மாணவர்கள் அக்கீம், ஜெரால்ட், ஸ்டீபன், வர்கீஸ், செய்யது அபுதாகிர், முரளி, தியாகு, கிஷோர், மிராஜ் உட்பட பல்வேறு மாணவர்கள் செய்திருந்தனர்.

மேலும் படிக்க